தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 40.44 கோடி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 40.44 கோடி ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் அவசரகால தேவைக்காக மத்திய அரசு அளித்த அனுமதியை தொடர்ந்து கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதன்பின்னர் 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அனுமதி அளித்தது.

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்து மக்களை துயருக்கு உட்படுத்தின. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று இரவு 7 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள தற்காலிக அறிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் இன்று ஒரு நாளில் 46 லட்சத்து 38 ஆயிரத்து 106 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த எண்ணிக்கை 40 கோடியை (40,44,67,526) கடந்து உள்ளது என தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்