கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 64 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இதனிடையே மராட்டியத்தில் தற்போது புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரும் சர்வதேச பயணங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 9 பேர் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. ( மராட்டியம் - 28, ராஜஸ்தான் - 17, டெல்லி - 6, குஜராத் - 4, ஆந்திரா -1, கர்நாடகா - 3, சண்டிகர் - 1, கேரளா -1).

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு