தேசிய செய்திகள்

ரெயில் டிரைவர் மயங்கி விழுந்து சாவு

உடுப்பி அருகே ரெயில் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் மணிபால் புறநகர் பகுதியை சேர்ந்தவர் மங்கல்தாஸ் நாயக் (வயது 51). இவர் கொங்கன் ரெயில்வேயில் ரெயில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் நேத்ராவதி விரைவு ரெயிலை இயக்கி கொண்டிருந்தார்.

அவருக்கு கைவலி இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சகஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து மணிப்பால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்க வந்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்