புதுடெல்லி,
மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த இரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஏற்பட்ட தொற்றை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பினார். தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரமேஷ் பொக்ரியால் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட போதும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் வீடு திரும்பியுள்ளார்.