புதுடெல்லி
இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் 121-வது பிறந்தநாள் இன்று. இறந்து பத்தாண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்குமூலம் ஒரு வீடியோவைத் தரவேற்றி, பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.
அதில், `சுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச்செய்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று, அந்த மாபெரும் ஆளுமையின் முன்னாள் தலைவணங்குகிறோம். மக்களின் எண்ணங்களுக்காக அயராது உழைத்த மிகத் தைரியமான தலைவராக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.