தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.

இந்த நிலையில் வருகிற 10-ந்தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்தார். துணை ஜனாதிபதி அலுவலகத்துக்கு தனது மனைவி டாக்டர் சுதேசுடன் வந்த ஜெகதீப் தன்கரை, வெங்கையா நாயுடு தனது மனைவி உஷாவுடன் வரவேற்றார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி அலுவலகத்தை தன்கருக்கு நாயுடு சுற்றிக்காட்டினார். அத்துடன் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சந்திப்பின்போது புதிய துணை ஜனாதிபதிக்கு அங்க வஸ்திரம் ஒன்றை வெங்கையா நாயுடு பரிசளித்தார். இரு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் டுவிட்டர் தளங்களில் பகிர்ந்திருந்தனர்

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்