தேசிய செய்திகள்

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்கும் செக் மோசடி வழக்குகளில் விரைவில் தீர்வு

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செக் மோசடி வழக்குகளில் விரைவில் தீர்வு கிடைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக செலாவணி மசோதா 1881ல் திருத்தம் செய்து புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இதன் மூலம் செக் மோசடி வழக்குகளில் இருக்கும் தேவையற்ற சட்ட நடைமுறைகள் களையப்படுகின்றன. அத்துடன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த மோசடியில் ஈடுபட்டவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவீதத்துக்கு மிகாமல் நிவாரணம் பெற்று தரப்படும். அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் விடுவிக்கப்பட்டால், அவர் வழங்கிய நிவாரணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்த நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரசாத் சுக்லா, காசோலைகள் மற்றும் வங்கி நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையை இந்த மசோதா காக்கும் என்று கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்