தேசிய செய்திகள்

‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது - சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌‌ஷன் மீது புகார் மனு தாக்கல்

‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌‌ஷன் மீது புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட 2 தொண்டு நிறுவனங்கள் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் கருவியில் பதிவான தகவல்களை ஒரு வருடத்துக்கு அழிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் தேர்தல் கமிஷன் ஒரு வருடத்துக்கு முன்பே அந்த தகவல்களை அழித்துவிட்டது. எனவே வருங்காலத்தில் தேர்தல் தகவல் முரண்பாடுகளை விசாரிக்க ஒரு வலுவான நடைமுறையை வகுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதற்கு நீதிபதிகள், இப்போதைக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...