தேசிய செய்திகள்

குடித்துவிட்டு தொல்லை; பிறந்த நாளன்று கணவனை கொலை செய்த மனைவி

குடித்துவிட்டு தொல்லை செய்த கணவனை பிறந்தாள் அன்றே மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

தினத்தந்தி

பாலக்காடு,

கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரது மனைவி அன்னலட்சுமி.

கணவன் ரஞ்சித் பிறந்த நாள் தினமான கடந்த 6-ம் தேதி மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனை அறிந்த அப்பகுதியினர் கட்டப்பனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த வழக்கு இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி விசாரித்து வந்தார். ஆனால் கொலை குறித்த சரியான தகவல் எதுவம் கிடைக்க வில்லை. இதனால் அவர் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்,

ரஞ்சித்தின் மனைவியிடம் நடத்திய விசாரணையின் மூலம் கொலைக்கான காரணம் தெரியவந்து உள்ளது. ரஞ்சித் குடித்துவிட்டு மனைவியை தெல்லை செய்து வந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அன்னலெட்சுமி

ரஞ்சித்தின் தலையில் மரக்கட்டையால் அடித்து உள்ளார்.

இதில் மயக்கமடைந்த அவரை அருகில் கிடந்த ஒரு கொடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீட்டுக்கு பின்புறம் போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்து உள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அன்னலெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் என்று தெரிவித்தனர்.

குடி போதையில் தொல்லை செய்த கணவனை பிறந்தநாள் தினத்திலேயே மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்