ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளியை சேர்ந்த அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியை பிரிந்து சென்ற ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து அறிந்த அகிலா, தனது இல்லத்திற்கு ஸ்ரீகாந்தை அழைத்து வந்ததுடன், மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார்.
அப்பொழுதும் ஆத்திரம் தீராத அவர், செருப்பு மாலையை ஸ்ரீகாந்திற்கு அணிவித்தார். தகவலறிந்து விரைந்த போலீசார் ஸ்ரீகாந்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.