தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி ஏராளமான உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி சுமார் 10 ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

இந்த தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு போடப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசியும் ஒன்றாகும். இந்த தடுப்பூசியால் வெளிநாடுகளில் சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசியால் கவலைக்குரிய சிக்னல்கள் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், இந்த பிரச்சினை குறித்து கடந்த சில வாரங்களாக இந்திய மருத்துவக்குழுவினர் சரியான முறையில் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவிதமான கவலைக்குரிய அம்சமும் தென்படவில்லை. எனவே கோவிஷீல்டு தடுப்பூசி மூலமான இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முழு பாதுகாப்பானது என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு