தேசிய செய்திகள்

ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லை: யெஸ் வங்கி கிளைகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதல்

ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லாததால், யெஸ் வங்கி கிளைகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிதி நெருக்கடியில் தவித்து வருகிற யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரையில் மட்டுமே திரும்ப எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தொடர்ந்து 2-வது நாளாக இந்த வங்கி கிளைகளில் பணத்தை திரும்ப எடுக்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியது. இன்னொரு பக்கம் இந்த வங்கியின் இணையதள வங்கிச்சேவை முடங்கிப்போய்விட்டது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லாமல் வாடிக்கையாளர்கள் வெறும் கையுடன் திரும்பும் நிலையும் ஏற்பட்டது.

டெல்லியில் நாடாளுமன்ற வீதி அஞ்சல் அலுவலகத்தில், ரிசர்வ் வங்கியின் அடுத்த உத்தரவு வரும்வரை யெஸ் வங்கியின் காசோலைகள் வசூலுக்கு அனுப்பப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது, பதற்றம் அடையத்தேவையில்லை என்று யெஸ் வங்கியின் நிர்வாகி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்