தேசிய செய்திகள்

மேற்கு வங்காள மாநிலத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல் இல்லை - மம்தா அரசு அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல் இல்லை என்று மம்தா அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மத்திய அரசுக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஓட்டுனர் உரிமம் வழங்குவதிலும், விதி மீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையிலும் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த திருத்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின்படி ஓட்டுனர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் நிலையில் நாங்கள் இல்லை, இது பற்றி மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என மேற்கு வங்காள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் போக்குவரத்து மந்திரி சுவேந்து அதிகாரி நேற்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்