தேசிய செய்திகள்

இந்தியாவில் தேசிய கட்சி என்று எந்த கட்சியும் இல்லை; தெலுங்கானா மந்திரி பரபரப்பு பேச்சு

இந்தியாவில் தேசிய கட்சி என்று எந்த கட்சியும் இல்லை என தெலுங்கானா மந்திரி கே.டி. ராமராவ் இன்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த சூழலில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, பிரசாந்த் கிஷோர் முன்பு தலைமையேற்று நடத்திய ஐபேக் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கிஷோருடன் ரூ.300 கோடியளவில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், இதனை சந்திரசேகர ராவ் திட்டவட்டமுடன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் தெலுங்கானா மந்திரி கே.டி. ராமராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாட்டில் தங்களை தேசிய கட்சி என்று கூறி கொள்வதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை.

பா.ஜ.க.வை எடுத்து கொண்டால் தென்பகுதியில் ஒரே ஒரு மாநிலத்திலேயே காணப்படுகிறது. காங்கிரசை ஒரு தேசிய கட்சி என்று நீங்கள் கூறுவீர்களானால், உத்தர பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் அதன் நிலைமை என்ன என நமக்கு தெரியும்.

இந்தியாவில் தேசிய கட்சி என்று எந்த கட்சியும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பா.ஜ.க. ஒரு வடஇந்திய கட்சி. காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களில் குறுகி விட்டது.

ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுடைய செயல் திட்டங்களை மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எது பெரிய கட்சி, எது சிறியது என்று மக்களே முடிவு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்