தேசிய செய்திகள்

‘ரபேல்’ விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; பிரான்ஸ் விமான உற்பத்தி நிறுவனம் மறுப்பு

‘ரபேல்’ விமான பேரத்துக்காக, இந்தியாவை சேர்ந்த ஒரு இடைத்தரகருக்கு 10 லட்சம் யூரோ (ஐரோப்பிய பணம்) லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக ஒரு பிரான்ஸ் நாட்டு ஊடகம் சமீபத்தில் தெரிவித்தது.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

கடந்த 2000-களின் தொடக்கத்தில் இருந்தே எங்கள் நிறுவனம் ஊழலை தடுக்க கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. தொழில், வர்த்தக உறவுகளில் நேர்மை, தூய்மை மற்றும் நற்பெயருக்கு உத்தரவாதம் அளித்து வருகிறது. சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

அத்துடன், பிரான்ஸ் ஊழல் ஒழிப்புதுறை உள்ளிட்ட அரசு அமைப்புகளும் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தன. எனவே, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடுகளோ, விதிமீறல்களோ நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்