தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7. 67 லட்சமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மந்திரிகள் குழுவை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஹர்ஷவர்தன், நிபுணர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனையின் போது, இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டாலும் தேசிய அளவில் இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்