கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க கொள்கை உருவாக்க கோரி பொதுநல மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

கலந்தாலோசித்த பிறகு மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் மாணவிகள், அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் கட்டாயம் மாதவிடாய் விடுப்புகளை அளிக்க கொள்கையை உருவாக்க வேண்டும் என சைலேந்திர மணி திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது "கேரள அரசு பல்கலைக்கழகங்களில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பல தனியார் நிறுவனங்களில் கூட மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

எனினும் இந்த பொதுநல மனுவை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "தகுதிவாய்ந்த குழு பரிசீலித்து, தொடர்புடைய அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகு மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம். சட்டம் மூலம் மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவதால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

Also read:லால்குடி அருகே சோழர் கால சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டெடுப்பு

தானாக முன்வந்து விடுமுறை வழங்குவது சிறந்தது. சட்டத்தில் அது கட்டாயம் என்று சொன்னவுடன், யாரும் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். இதனால் மனுதாரர் கோர்ட்டை மீண்டும் மீண்டும் அணுக வேண்டிய அவசியமில்லை" என கூறினார்.