தேசிய செய்திகள்

நான் எந்தத் தவறையும் செய்யவில்லை:கைது நடவடிக்கைக்கு ஆளான மத்திய மந்திரி நாராயண் ரனே கருத்து

நாராயண் ரானே கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டார். மத்திய மந்திரி ஒருவர் கைது செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

மும்பை,

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரியான நாராயண் ரானே ராய்காட்டில் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு பேசும்போது, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு கூடதெரியவில்லை.

தனது உதவியாளரிடம் அதை கேட்டு தெரிந்துகொள்ளும் நிலையில் தான் அவர் இருக்கிறார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அவரை ஓங்கி அறைந்திருப்பேன்" என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இவ்வாறு பேசிய மத்திய மந்திரி நாராயண் ரானேயை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது.

இந்த நிலையில், நாரயண் ரானே ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருக்கின்றனர். எனவே, என்னை கைது செய்தனர். கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா சமயத்தில், எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார். திஷா சலியன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டர். ஆனால், இதற்கு காரணமானவர்கள் இன்னும் சுதந்திரமாக உலவி வருகின்றனர் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்