தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நாளை திருமஞ்சனம்

ராமநவமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன்கிழமை) ராமநவமி விழா நடக்கிறது. அதையொட்டி நாளை காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பங்காருவாகிலியில் ஆஸ்தானம், 22-ந்தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்