தேசிய செய்திகள்

கேரளாவில் வரலாற்றில் இல்லாத வெள்ளம் ‘மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ பினராயி விஜயன் எச்சரிக்கை

கேரளாவில் வரலாற்றில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods

தினத்தந்தி

கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதனால் மாநிலம் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறது. மாநிலமே உருகுலைந்து காணப்படுகிறது. அணைகள் நிறைந்து வழிவதால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் பலியானவர்கள் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் வரலாற்றில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளாவில் அணைகள் அனைத்தும் நிரம்பி, நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், மக்களுக்கு நீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள், மோட்டார்கள் ஏராளமானவே பழுதடைந்து இருக்கின்றன. வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் கேரளாவில் மழை பெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுக்கும். அண்டை மாநிலங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். எங்களுக்கு மழை நின்று பின்பும் அதிகமான உதவி தேவைப்படும், அதை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். பிரதமர் மோடியிடம் கூடுதல் உதவியையும் கோரியுள்ளார் பினராய் விஜயன்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்