புதுடெல்லி,
டெல்லியில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் கூறிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி,
லாட்டரி சீட்டுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. லாட்டரி சீட்டு விவகாரம் குறித்த ஆலோசனை நடத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8%இல் இருந்து 1%ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.