அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கம்லேஷ் திவாரி உள்ளிட்ட சிலர் நேற்று பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, அந்த வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைதானவர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக பைசாபாத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் சிசோடியா தெரிவித்தார்.