தேசிய செய்திகள்

370-வது பிரிவு நீக்கத்தை எதிர்க்கும் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்: ஜார்கண்ட் முதல்-மந்திரி பேச்சு

370-வது பிரிவு நீக்கத்தை எதிர்க்கும் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என ஜார்கண்ட் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் தியோகர் மாவட்டம் சரத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு 370-வது பிரிவு முட்டுக்கட்டையாக இருந்ததால், அந்த பிரிவை மத்திய அரசு நீக்கியது. ஆனால் அதை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

அப்படி எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். அந்த நாட்டில் பிரதமராகவோ, முதல்-மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ ஆகிக் கொள்ளுங்கள். எனவே, மேற்கண்ட கட்சிகள் இங்கு ஓரிடத்தில் கூட வெற்றிபெற விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்