புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.
இதனையடுத்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன.
இதேபோன்று பல்வேறு நாட்டினரும் சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து வெளியேறி நாடு திரும்பிய பெயர் வெளியிட விருப்பம் இல்லாத இந்தியர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
அவர், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து வெளியேறுவதற்காக வயது முதிர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.
இந்தியர்கள் பலர் சிக்கி தவிக்கின்றனர் என்றும் அவர்களை அரசு வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொண்டார்.