படம்: ANI 
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் பண மோசடி : 3 பேர் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் பண மோசடி செய்தது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான ஓஎல் எக்ஸ்-ல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனை பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.

மோசடி நபரின் செயல் குறித்து டெல்லி சிவில் லைன் போலீஸ் நிலையத்தில் ஹர்ஷிதா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் மதுரா எல்லையில் சஜித்(26), கபில்(18) மற்றும் மன்வீந்திர் சிங்(25) ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், முக்கியக் குற்றவாளியான வாரிஸ் (25) என்பவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை