தேசிய செய்திகள்

கேரளாவில் லாரி-வேன் மோதல் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

கேரளாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். #Accident

தினத்தந்தி

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சாலா என்கிற இடத்துக்கு அருகே நேற்று அதிகாலை வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேனை, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த ராமர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (45), லிங்கம் (70) ஆகியோரும் வேனில் இருந்தனர்.

இந்த வேன் அங்கு உள்ள சோவாநாடல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதே சாலையில் சென்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில், டிரைவர் உள்பட வேனில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்