புதுடெல்லி,
டெல்லியில் உஸ்மான்பூர் பகுதியில் வசிக்கும் சலீம், நசீம், சைமன் ஆகியோரிடம் இருந்து 26 கை துப்பாக்கிகள், 19 பத்திரிக்கைகள் மற்றும் 800 தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சலீம் மீது ஏற்கனவே 8 வழக்குகள் உள்ளது. கொலை வழக்கும் அவர் மீது உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் ஆணையர் அதுல் குமார் கூறுகையில்,
குற்றவாளிகள் அனைவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.