புதுடெல்லி,
விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று 3 ஜன்னல்களின் உள்பக்க சட்டங்கள் பெயர்ந்து விழுந்தன. இதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
இதனால் பயணிகள் மத்தியில் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. விமான பணிப்பெண்கள் அந்த சட்டங்களை மீண்டும் பொருத்தி ஜன்னலை சரி செய்தனர். விமானம் டெல்லி போய்ச் சேர்ந்த பிறகு, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.