தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் நாட்டுச்சாராயம் குடித்து 3 பேர் பலி

நாட்டுச்சாராயம் குடித்த 3 பேருக்கும் வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது.

மீரட்,

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இயங்கி வந்த அரசு அனுமதி பெற்ற நாட்டுச்சாராய கடையில் நேற்று முன்தினம் சாராயம் குடித்ததில் பாபுராம் (வயது 60), ஜிதேந்திர (35), அங்கித் (40) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜிதேந்திர, அங் கித் மற்றும் பாபுராம் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காலாவதியான சாராயத்தை உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்தனரா? அல்லது சாராயத்தில் விஷம் கலந்து இருந்ததா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.