ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள படே கதல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.