தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ‘நீட்’ முதுநிலை தேர்வை 1½ லட்சம் பேர் எழுதினர்

நாடு முழுவதும் ‘நீட்’ முதுநிலை தேர்வினை, 1½ லட்சம் பேர் எழுதினர்.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டில் மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் மாணவ, மாணவிகள் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் 165 மையங்களில் நடந்தது. இதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வுகளை எழுதினர். ஒற்றைச் சாளர முறையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு வாரியம் இந்த தேர்வை நடத்தியது.

காஷ்மீர் மாநிலத்திலும் நீட் முதுநிலை தேர்வுகளை எழுதுவதற்கு தேசிய தேர்வு வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அங்கு கடும் குளிர் நிலை நிலவியதால் வாகன மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு பலரால் மையங்களுக்கு சென்று தேர்வு எழுத முடியவில்லை. அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்