மொரதாபாத்,
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த பலத்த மழையின் போது ஏற்பட்ட பேரிடியில் சிக்கி இரு மாநிலங்களிலும் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதே போல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் இடி தாக்கி 2 பேரும், உத்தரகாண்ட் மாநிலம் மண்டல் பகுதியில் பலத்த மழைக்கு 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சில இடங்களில் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் என அறிவித்திருந்த நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.