கோப்புப் படம் ANI 
தேசிய செய்திகள்

காட்டுக்குள் தோழியுடன் சென்ற வாலிபர் புலி தாக்கி உயிரிழப்பு

காட்டுக்குள் தோழியுடன் சென்ற வாலிபரை புலி தாக்கி கொன்றது.

கட்சிரோலி,

கட்சிரோலி மாவட்டம் தேசாய்கன்ஞ் பகுதியை சேர்ந்தவர் அஜித் நாகாடே (வயது21). இவர் கடந்த 3-ந் தேதி மாலை தனது தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். உசேகாவ் வனப்பகுதி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளை வழியில் நிறுத்தி விட்டு, 2 பேரும் காட்டின் உள்ளே நுழைந்தனர்.

அப்போது புதர் ஒன்றில் பதுங்கி இருந்த புலி திடீரென அஜித் நாகடே மீது பாய்ந்தது. அவரை தாக்கி காட்டுக்குள் இழுந்து சென்றது. இதனை கண்ட தோழி அங்கிருந்து தப்பி அருகே உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த அஜித் நாகடேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...