தேசிய செய்திகள்

"இந்தியாவில் குவிந்து கிடக்கும் வாய்ப்புக்கள்... இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்" - பிரதமர் மோடி

இந்தியாவில் விவசாய துறையில் இருந்து விண்வெளி துறை வரை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசாவில் ஐஐஎம் சம்பல்பூரின் நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக், மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

கல்வித்துறையில் வளர்ச்சியை கண்டு வரும் ஒடிசா மாநிலம் கிழக்கு இந்தியாவின் கல்வி மையமாகி உள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய ஸ்டாட்-அப் நிறுவனங்களால் நாளை பன்னாட்டு நிறுவனங்களாக முடிவும் என்றும் இந்நிறுவனங்கள் நாட்டின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து உருவாகி வருகின்றன என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியாவில் விவசாயி துறையில் இருந்து விண்வெளி துறை வரை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் இந்தியாவில் குவிந்து இருக்கும் வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 2014 வரையில் இந்தியாவில் 13 ஐஐஎம்கள் இருந்தன. இப்போது எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.