தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை:இரட்டைக் குழந்தைகளுடன் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

வரதட்சணை கொடுமையால் தனது இரட்டைக் குழந்தைகளுடன் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

ஐதராபாத்

தெலுங்கானா செகந்திராபாத்தில் உள்ள பன்சிலால்பேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்(30) சவுந்தர்யா(27) தம்பதி. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், ஒன்றரை வயதில் நித்யா - நிதர்ஸ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளன.

முடி திருத்தும் தொழில் செய்து வரும் கணேஷ் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி சவுந்தர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்த சவுந்தர்யா, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தாய் வீடு இருக்கும் 8 அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்று, குழந்தைகளை கீழே வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமையால் செளந்தர்யா விபரீத முடிவு எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரது கணவர் கணேசை போலீசார் கைது செய்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்