நோவாபாரா,
மேற்கு வங்காளத்தில் நோவாபாரா சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சுனில் சிங் 63 ஆயிரத்து 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1 லட்சத்து ஆயிரத்து 729 வாக்குகளை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி 38,711 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது. சி.பி.ஐ. (எம்) 35,497 வாக்குகளுடனும் மற்றும் காங்கிரஸ் 10,527 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
இதேபோன்று உலுபேரியா மக்களவை தொகுதிக்கான தேர்தலில் அக்கட்சி 68,503 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகின்றது. அதற்கு அடுத்த இடத்தில், பாரதீய ஜனதா மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிகள் உள்ளன.
#TMC #bypoll #election #bjp #Westbengal