புதுடெல்லி,
தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
அவர் நேற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.
இந்நிலையில், தனது டெல்லி பயணத்தின் 3-வது நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாரமானுடனான இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.