கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தமிழகம்-கேரளா இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்...!

தமிழகம் மற்றும் கேரளா இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கேரளா- தமிழ்நாடு இடையேயான பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகம்- கேரளா இடையே பஸ் போக்குவரத்து நடத்த கேரள அரசு சார்பில் மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், தற்போது சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி இருப்பதை தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே அரசு பஸ்களை இயக்குவது தொடர்பாக கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு தமிழக போக்குவரத்து துறை மந்திரிக்கு கடந்த மாதம் 6-ந் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று பஸ் போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக பேசிய கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு, கேரள அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து சேவையினை மீண்டும் நடத்த தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து உள்ளார். இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் தமிழ்நாட்டிற்கு கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, வேளாங்கண்ணி, தென்காசி ஆகிய இடங்களுக்கு முதற்கட்டமாக பஸ்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்