தேசிய செய்திகள்

கேரள வியாபாரியிடம் போலி நகைகளை விற்று மோசடி செய்தவர் கைது; ரூ.22 லட்சம் மீட்பு

கேரள வியாபாரியிடம் போலி நகைகளை விற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்தை போலீசார் மிட்டனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த வியாபாரியான முரளிதரா என்பவர் கே.டி.ஜே. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். குறைந்த விலைக்கு தங்க நகை கொடுப்பதாக கூறி ரூ.30 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலி நகையை விற்று தன்னை ஏமாற்றியதாக 2 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியை சேர்ந்த கிரீஸ்ரங்கநாத்(வயது 28) என்பவர் ஆவார்.

கிரீஸ் ரங்கநாத்திடம் இருந்து ரூ.22 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் அதிகப்படியாக ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் பாக்கு தோட்டங்களில் அதிகப்படியாக பாக்குகளையும் திருடுவதற்கு கும்பல் சுற்றித்திரிவதால் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராகள் பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் அதிகப்படியாக ரோந்து பணியில் நடமாடுவதற்கு போலீஸ் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினா.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்