தேசிய செய்திகள்

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது -கார்த்தி சிதம்பரம்

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது என ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

ஏர்செல்மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையே 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 வழக்குகளிலும் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது. 6 முறை நேரில் ஆஜராகியும், 47 கேள்விகளுக்கு பதில் அளித்தும் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது என ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்