தேசிய செய்திகள்

பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மத்தியில் ஆளும் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடி வருகிறார். அந்த வகையில் இன்று ஜல்பைகுரி என்ற இடத்தில் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

"நாங்கள் மேற்கு வங்க மக்களுக்காகப் பணியாற்றியுள்ளோம். அவர்கள் எப்போதும் எங்களைத் திருடர்கள் என்றே குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள்.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இடையே வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள். இதைத்தான் அவர்கள் செய்வார்கள். 2014 தேர்தலில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். நிறைவேற்றினார்களா? அவர்கள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார்கள் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது