நகரி,
தேவினேனி அவினாஷ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பாகுபலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தார்.
கூர்மையாக வளைந்து நெளிந்த கொம்புகளுடன் கூடிய மாடுகள் பாகுபலி படத்தில் சில காட்சிகளில் வரும். இந்த காளைகள் பூட்டிய வண்டியில் தேவினேனி அவினாஷ் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுபற்றி அறிந்ததும் பாகுபலி மாடுகளை கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.