தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - ராணுவ தளபதி

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

காஷ்மீர் மாநிலத்தில் 3 போலீசாரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று பேட்டியளித்தார்.

அப்போது பயங்கரவாதிகளின் கொடூர செயலுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கண்டனம் தெரிவித்த அவர், இந்திய வீரர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் அதற்கு துணை போகிறது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களை போல நாம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. ஆனால் நமது வலியை அவர்கள் உணர செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது