தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு: ரூ.1000 கோடி நிதி கோரி பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்

வெள்ளத்தால் ஏற்பபட்ட இழப்பீடுகளை சரிசெய்ய சிறப்பு தொகுப்பாக ரூ .1000 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

பஞ்சாப்,

பஞ்சாப்பில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பருவமழையின் தீவிரத்தால் பஞ்சாப், மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜலந்தர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் உத்தரவிட்டு உள்ளார். இந்த நடவடிக்கைகளை அவரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில், வெள்ள நிவாரண நிதி கோரி பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பபட்ட இழப்பீடுகளை சரிசெய்ய சிறப்புத்தொகுப்பாக ரூ .1000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்