தேசிய செய்திகள்

மேலும் 46 லட்சம் டோஸ்கள் விரைவில் வழங்கப்படும் மாநிலங்களிடம் இன்னும் 72 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு மத்திய அரசு தகவல்

தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அந்தவகையில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்கள் பற்றிய விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 17 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 810 டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 16 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரத்து 796 டோஸ்கள் நேற்று காலை 8 மணி வரை போடப்பட்டு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 72 லட்சத்து 42 ஆயிரத்து 14 டோஸ்கள் இன்னும் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அடுத்த 3 நாட்களில் இன்னும் 46 லட்சத்து 61 ஆயிரத்து 960 டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தல் மற்றும் மேலாண்மை கொள்கையில் தடுப்பூசியும் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை