தேசிய செய்திகள்

6 மாநிலங்களில் மட்டுமே இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

6 மாநிலங்களில் மட்டுமே இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்றில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நேற்றைய முதல் நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான மையங்களில் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 553 மையங்களில் 17072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒட்டுமொத்தமாக 2,24,301 பேருக்கு இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டது. மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டது. முதல் நாளில் 2 லட்சத்து 07 ஆயிரத்து 229-பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது அமெரிக்கா, இங்கிலாந்தில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்