தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலையை ஜனாதிபதி கேட்டறிந்தார்

உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியை சந்தித்து ஜனாதிபதி நலம் விசாரித்தார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (வயது 66), கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தொடர் சிகிச்சைகள் காரணமாக அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சுவாச பிரச்சினையாலும், உடல் சோர்வாலும் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் பிரதமர் நரேந்திர மோடியும், மூத்த மந்திரிகளும் அங்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்று விசாரித்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று, அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அருண் ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இதுவரை அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு