புதுடெல்லி,
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வரலாறு காணாத அன்னிய முதலீடு இந்தியாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வசூலிலும் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் குறிப்பாக விவசாயத்தில் புதிய முன்னுதாரணங்களை நாம் வடிவமைத்துள்ளோம்.
கடந்த ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.70 லட்சம் கோடி வரை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், யுபிஐ மூலம் மட்டுமே இந்தியா சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் செயலிகள் வேலை செய்கின்றன. இவற்றில் கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் செயலிகள் உருவாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.