தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புது டெல்லி,

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, இரு அவைகளின் சபாநாயகர்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் பதவியேற்றுக் கொள்கிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்