தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் காரிய கமிட்டி கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பிறகு அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, சோனியாக காந்தி இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓராண்டு கடந்த பின்னரும் 73 வயதான சோனியா இடைக்கால தலைவராக நீடிப்பதை அவரே விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இதற்கு மத்தியில் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் எனவும் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நாளை கட்சியின் செயற்குழுகூட்டம் இணைய வழியாக நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.

இதற்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 20 பேர் கூட்டாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், கட்சிக்குள் நிலையற்ற தன்மை நிலவுவதும், கட்சி பல்வேறு தருணங்களில் சறுக்கலை சந்திப்பதால் வேதனையுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையிலான மோதல் கூட பெரிய விரிசலாக விழுந்தது, அதன்பின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தலையிட்டபின் சச்சின் பைலட் சமாதானமாகினார். அடுத்ததாக பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் வரஉள்ளன. இதை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை என்று கட்சி நிர்வாகிகள் விரும்புவதாக தெரிகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை